164
மாத்தறை ஊருபொக்கயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, பெல்மடுலையின், பதுல்பான தொடம்எல்ல நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் 44பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 பேர் பயணித்த குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்தடைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love