Home இலங்கைஇலங்கையில் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை…

இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை…

by admin

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டுள்ள போதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் 03 இலட்சம் வரையில் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததன்  காரணமாக அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக  தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   அதற்காக  விசேட படிவங்கள்    தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிப்பவரின்  தனிப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாக அடையாள அட்டை வைத்திருக்கும்  மூன்று உறவினர்கள் மற்றும் அவர் வசிக்கும் பிரதேசத்தில் அடையாள அட்டை வைத்திருக்கின்ற மூன்று  பேரின்  தகவல்கள் ஆகியன வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சத்தியக் கடதாசி ஒன்று சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் இந்த திட்டத்திற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தில் விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More