இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் குழியில் வீழ்ந்து ஆண் குழந்தை மரணம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரைவயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(22) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வரட்சி காரணமாக வீட்டார் குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டாரினை தாழ இறக்கி பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்ட குழியிலேயே குழந்தை விழுந்துள்ளது. குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது குழந்தையின் தாயார் முற்றம் கூட்டிகொண்டிருந்ததாகவும், குழந்தை குறித்த நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்ததை அவதானித்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தெரிவித்து அயலவர்களின் உதவியுடன் தேடியபோதே குழந்தை குழியில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்து மீட்டுள்ளனர். எனினும் குழந்தை உயிரிழந்துள்ள நிலையல் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.