இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ மருத்துவமனை மற்றும் புற்றுநோய் ஆய்வகத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக அங்கிருந்த நோயாளிகள் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்;பட்டுள்ளனர்.
இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட தீ ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றுவந்த 84 பேரில் சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் மாலை சுமார் 5 மணியளவில் தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.