194
சுகயீனம் காரணமாக, கடந்த சில தினங்களாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை முதல் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
1 comment
வணக்கம்,
உங்கள் தலைப்பு இந்த நிகழ்வுக்கு பொருத்தமற்றது. கைகுலுக்கினார் என்பதை மட்டும் மெருகூட்டுவது உங்கள் வக்கிரத்தையே காட்டுகிறது. தமிழ் தீவிரவாதிகளிடமிருந்து அறிவும் ஆற்றலுமுள்ள இந்த மிதவாத தமிழ் தலைவரை காத்தருளுமாறு இறைவனை வேண்டுகின்றேன். இவ்வண்ணம் – முத்துதாசன்
Comments are closed.