மேற்கிந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ரொன்ஸ்போர்ட் பீற்றன் (Ronsford Beaton ) இன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமடையில் இடம்பெற்ற 2-வது ஒருநாள் போட்டியின் போது இடம்பெற்ற ரொன்ஸ்போர்ட் பீற்றன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் விதியை மீறி அவர் பந்துவீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 25 வயதான ரொன்ஸ்போர்ட்பீற்றன் பந்துவீச்சு 14 நாட்களுக்குள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.