Home இலங்கைகிளிநொச்சியில் ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பு

கிளிநொச்சியில் ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கியதேசிய கட்சியின் ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று பகல் 12 மணியளவில் குறித்த சந்திப்பு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுடன் மக்கள் வாழ்கின்றனர் எனவும் அவர்களிற்கான வசதகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே தாம் போட்டியிடுகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டொக்டர். விஜயராயன் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஆட்சியமைத்தால் மக்களிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தங்கள் கட்சி எவ்வாறு நடவடிக்கை எடு;ததுள்ளது என ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோது,

சில தினங்களில் சில காணிகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் ஆட்சியைக் கைப்பற்றினால் பல அபிவிருத்திகளை செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுற்று நீண்டகாலம் ஆகியுள்ள நிலையில் மக்களிற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படாமை தொடர்பில் அவரிடம் வினவியபோது,

மக்களிற்கான அத்தியாவசிய தேவைகளை பெற்று கொடுப்பதற்காக தாம் உழைக்க உள்ளதாகவும், பிரதேச சபைகளிற்கான நிதி போதாமல் இருந்தால் அரசுடன் பேசி அமைச்சரவை ஊடாக அவற்றை பூர்த்தி செய்ய தாம் முயற்சிப்போம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More