Home இலங்கைபியசேன கமகே ராஜாங்க அமைச்சராக நியமனம்

பியசேன கமகே ராஜாங்க அமைச்சராக நியமனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக பியசேன கமகே இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். பியசேன கமகே கடந்தமாதம் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்டிருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவரது உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டிருந்தது. கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்காகவே பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More