தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றையதினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிபெறுவதற்காகவே இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் முக்கியஸ்தர்கள் சிலர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு…
141
Spread the love