Home உலகம் 244 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் மஹேல ,சந்தர்போல், லாராவை பின்னுக்கு தள்ளிய அலஸ்டயர் குக்

244 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் மஹேல ,சந்தர்போல், லாராவை பின்னுக்கு தள்ளிய அலஸ்டயர் குக்

by admin


மெல்போர்னில் இடம்பெற்றுவரும் பொக்கிஸ் தின டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 244 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்களின் பட்டியலில் மஹேல ஜெயவர்த்தன, சந்தர்போல், பிரெய்ன் லாராவை அலஸ்டயர்   குக் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் பொக்சிங் தினப் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகின்றது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 327 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.  தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 491 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் அலஸ்டயர்  குக் 244 ஓட்டங்களைப் பெற்றதுடன் தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் உள்ளார். சர்வதேச போட்டியில் 32-வது சதத்தை பூர்த்தி செய்த குக், 5-வது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். இந்த 244 ஓட்டங்கள் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்த மஹேல ஜெயவர்த்தன, சந்தர்போல், பிரெய்ன் லாரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

 

England’s Alastair Cook celebrates making 200 runs against Australia during the third day of their Ashes cricket test match in Melbourne, Australia, Thursday, Dec. 28, 2017. (AP Photo/Andy Brownbill)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More