குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏமனில் சவூதி அரேபியா உள்ளிட்ட படையினர் நடத்திய தாக்குதல்களில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமனின் டாயிஸ் மாகாணத்தின் சனநெரிசல் மிக்க சந்தையொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரச படையினருக்கும் இடையிலான மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரையில் 8750 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ள நிலையில் மோதல்கள் காரணமாக 20.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளை நாடி நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment