குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கையின் மூலம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார். கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ம் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு?
Dec 30, 2017 @ 03:12
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார்.
இந்தக் குழுவின் விசாரணை அறிக்கையே இன்றைய தினம் பெரும்பாலும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஜனாதிபதி, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ம் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.