Home இலங்கைஅல் குரான் புத்தகங்களை கல்பிட்டி காவல்துறை கைப்பற்றியது…

அல் குரான் புத்தகங்களை கல்பிட்டி காவல்துறை கைப்பற்றியது…

by admin

தேர்தல் காலத்தில் விநியோகிக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 625 அல் குரான் புத்தகங்கள் கல்பிட்டி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இம்முறை கல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கல்பிட்டி – முதலப்பாளி பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களை அடுத்து இந்த அல் குரான் புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் கல்பிட்டி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கவே இந்த அல் குரான் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததாக, வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது கறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More