உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் இடம்பெற்ற பயணிகள் புகையிரதம் தடம்புரண்ட விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின்; முகவர் எனத் தெரிவிக்கப்படும் ஷம்சுல் ஹோடா என்ற நபர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கான்பூரில் பாட்னா – இந்தூர் விரைவு புகையிரதம் கவிழ்ந்து 150 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் புகையிரதத்தின் 14 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடந்த சனிக்கிழமை ஷம்சுல் ஹோடா துபாயில் இருந்து தப்பி நேபாளம் வந்ததாகவும் அவர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது நேபாள போலீசார் கைது செய்துள்ளதுடன் டெல்லிக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கான்பூர் புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களின் 133 ஆக உயர்வடைந்துள்ளது
Nov 21, 2016
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் இடம்பெற்ற பயணிகள் புகையிரதம் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை பாட்னா – இந்தூர் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் சிக்கி லேசான மற்றும் படுகாயமடைந்துள்ள 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிகவும் கோரமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்துக்கு, குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் சோனியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புகையிரத தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.