Home இலங்கைகோண்டாவிலில் வர்த்தக நிலையம் -முச்சக்கரவண்டி மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

கோண்டாவிலில் வர்த்தக நிலையம் -முச்சக்கரவண்டி மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் மீதும், அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேரே இத்தாக்குதலிலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வாள் வெட்டுக்குழுக்களை இலக்கு வைத்து காவல்துறையினர் வீதி சோதனை , விசேட சுற்றிவளைப்புக்கள் , சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன போதிலும் வாள் வெட்டுக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாதமை பொதுமக்களிடதே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More