சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 18 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுன்செங் கவுண்டியில் உள்ள லாங்யுன் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுரங்கத்தில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிரு த அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதனையடுத்து தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும் சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டதனையடுத்து அவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏனைய 18 பேரை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது எனவும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படடு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.