150
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சந்திக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பாரிசில் நடக்கவுள்ள முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவேந்தலின்போது அவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சோவியத் ரஸ்யா இடையே பனிப்போர் நிலவிய காலத்தில், இரு நாடுகளும் கையெழுத்திட்ட அணு ஆயுத பயன்பாடு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்த பின் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love