Home இலங்கையாழ்.சுன்னாகம் பெருங்குற்ற பிரிவு காவற்துறையினருக்கு இடமாற்றம்…

யாழ்.சுன்னாகம் பெருங்குற்ற பிரிவு காவற்துறையினருக்கு இடமாற்றம்…

by admin

யாழ்.சுன்னாகம் காவல்  நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு காவற்துறையினருக்கு திடீர் இடமாற்றம் வழங்கபட்டு உள்ளது. சுன்னாகம் காவற்துறைப்  பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் உரிய முறைகளில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை எனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருபதாகவும் தெரிவித்தே அப்பிரிவில் கடமையாற்றிய எட்டு காவற்துறையினரும் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரெஷான் பெனர்ண்டோவின் உத்தரவில் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய காவற்துறை  நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதான காவற்துறை  நிலையத்தின் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய பத்து காவற்துறை  உத்தியோகஸ்தர்களும் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிட்ட தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More