சீனாவில் சிறுவர் பாடசாலை வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர், குழந்தைகளை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி சிறுவர் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தபோது பாடசாலை வளாகத்திற்குள் சென்ற 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தான் கொண்டு சென்ற கத்தியால் குழந்தைகள் மீது வெட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாவலர்களும், பாடசாலை ஆசிரியர்களும் அந்த பெண்ணை பிடித்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளாகிய 14 குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு;ளளனர். தாக்குதல் நடத்திய பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பாடசாலைக்கு சென்று ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாக சமுக வலைத்தளங்களில்; தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது