இலங்கை பிரதான செய்திகள்

ஊடக – ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்


இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனியா பிரித்தானியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் இலங்கையில் இடம்பெற்றும் வரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் எனவும் ஐரோப்பிய ஓன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து தரப்பினரையும் அரசிலமைப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஓன்றியம் வன்முறைகளை தவிர்ப்பதுடன் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஊடக மற்றும் ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.