Home உலகம்அமெரிக்காவின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது

அமெரிக்காவின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது

by admin


அமெரிக்கா போர் தொடுத்தால் தமது நாடும் போருக்கு தயார் நிலையில் உள்ளது என ரஸ்யா தெரிவித்துள்ளது. கடந்த 1987-ல் அமெரிக்கா, சோவியத் ரஸ்யாவுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுத உடன்படிக்கையின்படி நிலத்தில் இருந்து ஏவப்படும் 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட அணு ஏவுகணைகளை இருநாடுகளும் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அண்மையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளி யேறப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.  இந்தநிலையில் நேற்று முன்தினம் ஐ.நா. சபையில் உரையாற்றிய ரஸ்ய வெளியுறவுத் துறை துணை இயக்குநர் அண்ட்ரே பெலுசோவ்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரஸ்யா போருக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சுமத்தியது உண்மைதான் எனவும் அமெரிக்கா போர் தொடுத்தால் ரஸ்யாவும் போருக்குத் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஸ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More