இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் அவதானித்து வருகின்றார் என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸரீபனே டூஜாரிக்; (Stephane Dujarric) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பொதுச் செயலாளர் நாயகம் இலங்கையில் உருவாகியுள்ள நிலவரத்தை ஆழ்ந்த கவலையுடன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் மதிக்குமாறும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஐநா செயலாளர் நாயகம் கேட்டுக்கொள்கின்றார் எனவும் ஸ்ரீபனே டூஜாரிக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.