ஜெர்மனியில் தாதியொருவர் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிக சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த 41 வயதான ஆண் தாதியான நீல்ஸ் ஹேஜெல் என்பவரே இவ்வாறு நோயளிகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ள்ளார். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் என்ற மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது இவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது