Home இலங்கைகிளிநொச்சியில் ஹெரோயினுடன் கைதானவர் காவல்துறையினரின் காவலிலிருந்து தப்பியோட்டம்

கிளிநொச்சியில் ஹெரோயினுடன் கைதானவர் காவல்துறையினரின் காவலிலிருந்து தப்பியோட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் கடந்த இருபத்தாறாம் திகதி ஆறு கிராம் ஹெரோயினுடன் மன்னார் விசேட போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சிப் காவல்துறையினரின் காவலில் இருந்த பொழுது தப்பிச் சென்றுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

கைது செய்ய முற்றபட்ட பொழுது மன்னார் விசேட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு குழு உப பரிசோதகர் ஒருவருக்கும் சந்தேக நபருக்கும் காயங்கள் ஏற்;பட்டுள்ள நிலையில் கைதான சந்தேக நபரை விசேட குழுவினர் கிளிநொச்சி காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்

சந்தேக நபருக்கு காயம் ஏற்பட்டிருந்தமையால் சந்தேகநபரை கிளிநொச்சிக காவல்துறையினர் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்திருந்த வேளை கடந்த 28 ஆம் திகதி நான்காம் இலக்க நோயாளர் விடுதியில் இருந்து குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்

இதனையடுத்து குறித்த நேரத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினரும் உடனடியாக பணி நீக்கப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிக் காவல்துறைமா அதிபர் மகிந்த குணரத்ன அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது சம்பவம் உண்மையானது என உறுதிப்படுத்தியுள்ளார்

சந்தேக நபரை தேடும் பணியில் கிளிநொச்சிக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More