Home இலங்கை07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றுவோம்

07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றுவோம்

by admin


எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார் அவர் ஶPலங்கா பொதுஜன பெரமுனவின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு மாத்திரமே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கையில் சதித்திட்டம் இருப்பதாகவும் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் ஏதாவது தவறு இடம்பெற்றால் அதற்கு பாராளுமன்றத்தை பிற்போடும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More