168
மனித உரிமைகள் வாக்குறுதிகளிலிருந்து இலங்கை பின்வாங்கினால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார். ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கம் சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே, ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றதாகவும் இந்த அர்ப்பணிப்புகளை நிறைவேற்றாவிட்டால், தாங்கள் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love