சிரியா – ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள சுமார் 50,000 மக்களுக்கு முதலுதவிகள் செய்ய அதற்கு தேவையான பொருட்களுடன் ஐ.நா உதவிக்குழு சென்றடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் முதன்முறையாக அவர்களுக்கு உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒக்டோபர் 27ஆம் திகதி ருக்பன் முகாமிற்கு வரவிருந்த உதவிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்போடப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருக்பனை சிரியா ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் ஜோர்டானும் அப்பகுதிக்கு உதவி வழங்குவதை தடுத்து வருகிறது.மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் குழந்தைகள் பல உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது