Home இலங்கைமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு, 100 ஆவது நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் அகழ்வு பணிகள்..

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு, 100 ஆவது நாட்களை கடந்தும் முடிவின்றி தொடரும் அகழ்வு பணிகள்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று திங்கட்கிழமை (5.11.18) 100 ஆவது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது. தெடர்ச்சியாக மழை பெய்து கொண்டு இருக்கின்ற போதும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது கடந்த வியாழக்கிழமைக்கு பின் இன்று திங்கட்கிழமை காலை 100ஆவது தடவையாக அகழ்வுப் பணியானது இடம் பெற்றது.

இது வரையான அகழ்வு பணிகளின் முடிவின் படி 216 க்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் 209 அதிகமான மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எச்சங்களை அப்புறப்படும்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

அத்துடன் குறித்த மனித புதை குழி அகழ்வு பணி தொடர்பான விபரங்களை அறியும் பொருட்டு வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்காக வாதிடும் சட்டத்தரணிகள் அடங்கிய குழு இன்று (5) காலை 10.30 மணியளவில் மனித புதைகுழிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More