158
அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தமது கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்ற தமது நிலைப்பாட்டை அறிவித்ததாக, சந்திப்பின் பின்னர் மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love