உச்ச நீதிமன்றின் தீர்ப்பின்படி டெல்லியில் பசுமை பட்டாசு விற்பது எவ்வாறு எனக் கேள்வி எழுப்பிய வியாபாரிகள் காய்கறிகளுக்குள் வெடிகளை திணித்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்திருந்தது.
மேலும் பசுமை பட்டாசு எனப்படும் குறைவாக மாசுபடுத்தும் நவீன வகை பட்டாசுகளை மட்டுமே இனிமேல் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் விதிமுறைகள் மீறப்பட்டால், அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பசுமை பட்டாசு என்ற ஒன்று தயாரிக்கப்படாத நிலையில், அதை எங்கிருந்து கொள்முதல் செய்து மக்களிடம் விற்பனை செய்வது என அவர்கள் கேள்வி எழுப்யுள்ளனர்
ந்தவகையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுரைக்காய், முட்டை கோஸ், உள்ளிட்ட காய்கறிகளுக்குள் அதன் அளவுக்கேற்ப வெடிகளை திணித்து, ‘இதையா பசுமை பட்டாசு என விற்பது?’ என டெல்லியில் உள்ள சடார் பஜார் பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.