178
கடும் மழை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியில் எல்ல நகரத்தில் இருந்து ராவணன் எல்லை வரையான பகுதிகளில், வீதியின் இரண்டு இடங்கள் மண் சரிவுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல பகுதிகளில் மண் மேடு சரிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் வாகனங்களை செலுத்தும்பொழுது அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தவீதி விரிவு படுத்தப்பட்டு காப்பட் இடப்பட்டு சீர்செய்யப்பட்ட போதிலும் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு கட்டிடங்கள் அமைக்கப்படாததினால் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love