Home உலகம்15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இம்முறை ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிப்பு

15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இம்முறை ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிப்பு

by admin
 

15 வருடங்களாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் இந்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் ஜனாதிபதி; ட்ரம்ப் பங்கேற்றிருந்தார்.
எனினும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாதநிலையில் , நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More