குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த 150 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் திடீர் என அதிகரித்துள்ளது. கடந்த இருபத்துநான்கு மணிநேர மழையில் பின்னர் கிளிநொச்சிக் குளங்களின் நீர் மட்டத்தின் அளவு இரணைமடுக்குளம் 26 அடி 6 அங்குலமாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும், கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும், முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும், குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 10 அடியாகவும், கனகாம்பிகைக் குளம் 11 அடி 01 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
இவற்றில் வன்னேரிக்குளம் 06 அங்குலமும் கனகாம்பிகைக் குளம் என்பன வான் பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது