Home இலங்கைமாந்தை மேற்கு பருப்புக்கடந்தானில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

மாந்தை மேற்கு பருப்புக்கடந்தானில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் உள்ளாடையுடன் ஆண் ஒருவரின் சடலத்தை அடம்பன்  காவற்துறையினர்  மீட்டுள்ளனர்.

குறித்த காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை கண்ட அப்பிரதேச மக்கள் அடம்பன் காவற்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அடம்பன் காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த  ஆணின் சடலம் உள்ளாடையுடன் காணப்படுவதோடு,அவருடைய ஏனைய ஆடைகள் அருகில் காணப்பட்டதோடு பணப்பை, பியர் றின்களும் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அடம்பன் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More