Home இலங்கைபாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்ய மீண்டும் உத்தரவு!

பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்ய மீண்டும் உத்தரவு!

by admin

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கட்டகளை பிறப்பித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுவேளை, ரவீந்திர விஜயகுணரட்ன மீதான குற்றச்சாட்டுகளுக்கு அமைவதாக அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் முழு அதிகாரமும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கு இருப்பதாக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நீதிமன்றத்தின் இவ் உத்தரவை செயற்படுத்த தவறினால் அவருக்கு எதிராகவே குற்றவியல் சட்டத்தின் கீழ் 216 மற்றும் 185ம் சரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதவான் ரங்க திசாநாயக்க எச்சரிக்கை செய்துள்ளார்.

கொழும்பில் 2008 ஆம் ஆண்டில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் கடற்படை சிப்பாய் நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருப்பதற்கு உதவிகள் மற்றும் ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More