Home பிரதான செய்திகள்பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி

பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி

by admin


பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  மேற்கிந்தியதீவுகளில் நேற்றையதினம் ஆரம்பமான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிட்டன.நாணயச்சுழற்சியில் வென்று முதுலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து அடுத்து 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தமையினால் இந்தியா 34 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நாளையதினம் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More