144
நாடாளுமன்றம், எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டப்படும் என தெரிவித்திருந்த புதிய அரசாங்கம் நேற்று நள்ளிரவுடன், பாராளுமன்றினை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் சர்வதேச நாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன.
அந்தவகையில் இலங்கை அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக, பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கையின் அரசியலமைப்பை மதித்து செயற்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love