Home இலங்கைநாளை அவசரமாக கூடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம்

நாளை அவசரமாக கூடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம்

by admin


ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கவுக்கு சென்றிருந்த நிலையில் நாளை, நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட உயர்மட்டத்தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More