Home உலகம்ஜோர்டானில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ஜோர்டானில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

by admin

ஜோர்டானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குனமழை காரணமாக ஜோர்டானின் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் பழமையான பாலைவன நகரமான பெட்ராவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜோர்டான் நாட்டு ராணுவம் ஹெலிகொப்டர்களில் சென்று அவர்களை மீட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More