பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையாக செயற்படும் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அவசியமான தூண்களில் ஒன்று எனவும் இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனநாயக இலங்கையின் நீண்ட நாள் ஆதரவாளர் என்ற அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பை பின்பற்றி தற்போதைய நெருக்கடிகளுக்கு துரித தீர்வை காணவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அவிடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஜேர்மனி இந்தநடவடிக்கையானது மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலைiயில் இலங்கையின் அரசியமைப்பை மதிப்பதும் ஜனநாயகத்தை மதிப்பதும் மிக முக்கியமானவையாக அமைகின்றன எனவும் ஜேர்மனி தெரிவித்துள்ளது.