Home இலங்கைஅரச வாகனங்கள்- சொத்துக்களை ஒப்படைக்காத முன்னாள பிரதமர் அமைச்சர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

அரச வாகனங்கள்- சொத்துக்களை ஒப்படைக்காத முன்னாள பிரதமர் அமைச்சர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

by admin


அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என எந்தவொரு நபரும் அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தம் வசம் உள்ள அனைத்து அரச வாகனங்கள், சொத்துக்களை உரிய அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு தான் கௌரவமாக கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்படைக்க தாமதமாகும் பட்சத்தில் காவல்துறையினரைப்; பயன்படுத்தி குறித்த வாகனங்கள் சொத்துக்களை கைப்பற்றுவதுடன் அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More