உலகம் பிரதான செய்திகள்

மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் வெற்றி :

ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகின்ற நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3-வது குழுவில் மரண தண்டனையை ஒழிக்கும் வகையில், அதனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் ; தீர்மானத்துக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டதுடன் 30 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.