Home உலகம்பிரெக்சிற் உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் கூட்டாக வெளியிட்டுள்ளன

பிரெக்சிற் உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் கூட்டாக வெளியிட்டுள்ளன

by admin

பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்கள் கொண்ட பிரெக்சிற் வரைவு உடன்படிக்கையை பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும்     கூட்டாக வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.

இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த வரைவு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையினான எதிர்கால நிதி பரிமாற்றம், பாதுகாப்பு, விசா மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிற்; உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானிய அரசும்  நேற்று கூட்டாக வெளியிட்டுள்ளன.லண்டன் பாராளுமன்றமும் ஐரோப்பிய ஒன்றிய   நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More