சிம்பாப்வேயில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்களில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் காயடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிட்பிரிட்ஜ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த ஒரு பயணி ஒருவர் வைத்திருந்த எரிவாயு குப்பியினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அடையாளம் காண முடியாத அளவிற்கு சில உடல்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.