Home இலங்கைகரு  தனது சுயமரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென ஜி.எல் கூறுகிறா்!!!

கரு  தனது சுயமரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென ஜி.எல் கூறுகிறா்!!!

by admin

தனது சுயமரியாதையை காத்துக்கொள்ளும் முகமாக கரு ஜயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே காரணம் என்றும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து அவரை பதவி விலக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பதவி நீக்கம் செய்வதே நாடு எதிர் கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More