இலங்கை நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் சிறந்த பொறுப்புடன் தெரிவு செய்வதாகவும், சிறந்த தலைவனுக்கு தமது வாக்குகளை பிரயோகிப்பதே மக்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
தேவையற்ற தகைமைகளை காரணம் காட்டாது, கொள்கைகளையும் கல்வித் தகைமைகளுடன் நாட்டிற்கு முறையாக சேவையாற்றக் கூடியவரா என்பதையும் பார்த்தே வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வாக்குகளை சரியாக பயன்படுத்தினால் மாத்திரமே நாட்டின் எதிர்காலம் சரியாக அமையும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.