Home இலங்கைதேரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஜனாதிபதி கவலை :

தேரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஜனாதிபதி கவலை :

by admin

சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த வேளையில் அவர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இத் தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி அத்தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More