Home இலங்கையாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…

யாழில் ஜனவரிமுதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…

by admin

யாழ் மாவட்டத்தில் ஜனவரிமாதம் முதல் இன்று வரை 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலளவியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார்.

அத்தோடு நவம்பர் மாதம் வரை 611.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 300.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

இது சென்ற வருடத்தினோடு ஒப்புடுகையில் குறைவான அளவாக உள்ளதாகவும்,நவம்பர் மாதம் முடிவடைவதற்கு 10 நாட்கள் வரை இருக்கும் நிலையில் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று காலை 8.30 மணியளவில் இருந்து இன்று காலை 8.30 மணிவரை வடக்கு மாகணத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக சாவகச்சேரி பகுதியில் 43.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியதோடு, அச்சுவேலிப்பகுதியில்-23.5 மீல்லிமீற்றர் மழைவீழ்ச்சி,பருத்தித்தித்துறையில் 33.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,நயினாதீவில் 21.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,நெடுந்தீவில் 17.2 மில்லிமீற்றரும்,யாழ்ப்பாணம்-கச்சேரிபகுதியில் 22.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய காலநிலையை பொறுத்தவரை கடலோர பிரதேசங்களில் காற்றானது 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதால்,கடற்கொந்தாளிப்பாக காணப்படும் எனவே மீனவர்கள் வளிமண்டலளவிலயல் திணைக்களத்தில் அறிக்கையை கவனத்தில் எடுத்து செயற்படுமாறும் வளிமண்டலளவியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More