Home இலங்கை 2020 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதமே,  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்…..

2020 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதமே,  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்…..

by admin

2020 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதமே  பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும் எனவும்  அதற்கு இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனா­தி­பதி தேர்­த­லை முதலில்  நடத்­த­வேண்­டி­யதே   அவ­சி­ய­மாகும்  எனவும்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரி­வித்­துள்ளார்.

நேற்றையதினம்  அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்    மாவட்ட  அமைப்­பா­ளர்­க­ளது  கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது பெரும்­பான்மை பலம் இருந்தால் அதனை நிரூ­பிக்­கலாம். அதனை தவிர்த்து பாராளுமன்றைக்  குழப்­பு­வ­தா­னது ராஜ­ப­க்ஸ­வி­ன­ருக்கு பெரும்­பான்மைப் பலம் இல்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­பெற்­று­விட்­ட­தாக சபா­நா­யகர் அறி­வித்­த­தி­லி­ருந்து அமைச்­ச­ரவை கலைந்­து­விட்­டது. அதனால் பிர­த­ம­ருக்கு நிதி  ஒதுக்கீடு செய்ய முடி­யாது. அந்த யோச­னையை ரவி கரு­ணா­நா­யக்க முன்­வைத்­தி­ருக்­கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்­டோபர் 26 ஆம் திகதி நடத்­தப்­பட்ட சம்­ப­வத்தின் பின்னர் இந்தப் பிரச்­சினை முடிந்­து­விடும் என அவர்கள் நினைத்­தனர். ஆனால் இந்தப் பிரச்­சினை ஐக்கியதேசியக் கட்சிக்கு  மட்­டு­மன்றி முழு­நாட்­டிலும் பாரா­ரிய பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

எமது மக்­களின் வாக்­கு­க­ளினால் ஜனா­தி­ப­தி­யா­கிய ஒரு­வ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த செயற்­பாடு மக்­களின் இறை­மைக்கு விடுக்­கப்­பட்ட பாரிய அடி­யாகும். நாம் பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை பாது­காக்­கவே போரா­டு­கின்றோம்.

நாம் 19 ஆவது திருத்­தத்தை  வைத்து முன்­சென்றோம். அந்தத் திருத்­த­மா­னது மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­தி­யது. ஜனா­தி­ப­தியை பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூறும் ஒரு­வ­ராக மாற்­றினோம். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்­காக நாம் ஜனா­தி­ப­தி­யாக நிய­மித்­தவர் இன்று பாரா­ளு­மன்­றத்தை மிதிப்பதற்கு  முற்­ப­டு­கின்றார். நாம் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம்  எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More