Home இலங்கை உத்தராகண்ட்டில் உள்ளுராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி…

உத்தராகண்ட்டில் உள்ளுராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி…

by admin


உத்தராகண்ட்டில் உள்ளுராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 7 மேயர் பதவிகளில் 5-ல் பாஜகவும் 2-ல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன எடினத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன், ரிஷிகேஷ், காஷிபூர், ருத்ராபூர், ஹல்டுவானி ஆகியவற்றுக்கான மேயர் பதவிகளை பாஜகவும் ஹரித்துவார், கோட்தவார் ஆகியவற்றுக்கான மேயர் பதவிகளை காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. மேலும் 84 நகராட்சித் தலைவர் பதவிகளில் 34-ல் பாஜகவும் 25-ல் காங்கிரசும் 23-ல் சுயேச்சைகளும் 1-ல் பகுஜன் சமாஜக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

அத்துடன் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சைகள் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட 817 கவுன்சிலர் பதவிகளில் 464-ல் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் 215-ல் பாஜகவும் 132-ல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More